உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, சுயசக்தி நிறுவனத்தினால் சிறப்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 2026.06.05 அன்று, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் அடிப்படை வசதிகள் குறைந்த பாடசாலைகளுக்குத் தேவையான சுற்றாடல் உபகரணங்களை அன்பளிப்பு செய்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு சுயசக்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. A. செல்வராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக,
திரு. N. நாகராஜ் (உதவிப் பணிப்பாளர், ஹட்டன் கல்வி வலயம்), திரு. லோகநாதன் (முன்னாள் உதவிப் பணிப்பாளர், நுவரெலியா கல்வி வலயம்), திரு. கறுப்பையா பிள்ளை (தலைவர், சுயசக்தி நிறுவனம்) ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
மேலும், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
எமது எதிர்காலச் சந்ததியினருக்கு தூய்மையான, பசுமையான சூழலை உருவாக்க நாம் ஒன்றிணைவோம் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.












