• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மகா சங்கத்தின் ஒழுக்கக் கட்டுப்பாட்டை பேண விரைவில் புதிய சட்டத்தை தயாரிக்க அரசு முடிவு.!

Mathavi by Mathavi
May 28, 2026
in இலங்கை செய்திகள்.
0
மகா சங்கத்தின் ஒழுக்கக் கட்டுப்பாட்டை பேண விரைவில் புதிய சட்டத்தை தயாரிக்க அரசு முடிவு.!
Share on FacebookShare on Twitter

“பௌத்த தர்மம் தற்போது வாழும் நமக்கோ அல்லது காவி உடை தரித்து வீற்றிருக்கும் மகா சங்கத்தினருக்கோ மாத்திரம் சொந்தமானதல்ல. அது ஒட்டுமொத்த உலக மக்களின் விமோசனத்துக்காகவும் நன்மைக்காகவும் போதனை செய்யப்பட்டுள்ளது. மகா சங்கத்தினர் சங்க சமூகத்தை ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் பேணிச் செல்வதற்குத் தேவையான சட்டங்களை விரைவில் தயாரித்து வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.”

இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன ரஜமஹா விகாரையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ‘2570 ஆவது ஸ்ரீ புத்த ஆண்டு அரச வெசாக் விழாவின்’ ஆரம்ப நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டில் நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மத மறுமலர்ச்சி இன்றியமையாததாகும். உன்னத புத்த சாசனத்தையும் தர்மத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்காக, நமக்குள்ள பொறுப்புக்களைச் சரியாக இனங்கண்டு கைகோர்ப்பதே இந்த வெசாக் புண்ணிய தினத்தில் நாம் எடுக்கக்கூடிய சிறந்த உறுதிமொழியாகும்.

நாம் ஆன்மிக ரீதியாக வீழ்ச்சியடையும் போதெல்லாம் அதற்கு இணையாகப் பொருளாதார ரீதியாகவும், பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையும் போது ஆன்மிக ரீதியாகவும் வீழ்ச்சியடைந்திருக்கின்றோம் என்பதே நமது வரலாறு. எனவே, தார்மீக நெறிகளைப் பின்பற்றும் ஒரு சமூகத்திற்குள் மட்டுமே நம்மால் செழிப்பான பொருளாதார எழுச்சியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

2334 ஆண்டுகள் என்ற நீண்ட காலப்பகுதியாகப் பௌத்த தர்மம் இலங்கையில் அழியாமல் நிலைத்திருப்பதற்குக் காரண – காரியக் கோட்பாடும், எமது மகா சங்கத்தினரின் அர்ப்பணிப்புமே முக்கிய காரணங்களாகும். இன்று தர்மத்தின் பெயராலேயே தர்மம் சிதைக்கப்படும் மற்றும் ஒழுக்க நெறிகள் வீழ்ச்சியடையும் சந்தர்ப்பங்களை நாம் பார்க்கின்றோம்.

மூன்று நிகாயங்களைச் சேர்ந்த மகா சங்கத்தினரின் எழுத்துப்பூர்வக் கோரிக்கைக்கு இணங்க, விகாரைகள் மற்றும் தேவாலகம் சட்டத்தின் 41 மற்றும் 42 ஆம் பிரிவுகளைத் திருத்துவதற்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது. மகா சங்கத்தினர் சங்க சமூகத்தை ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் பேணிச் செல்வதற்கும், தர்ம நீதிமன்ற அதிகாரங்களை வழங்குவதற்கும் தேவையான சட்ட மூலங்களை விரைவில் தயாரித்து வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் உலக பௌத்த மகா மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இது நமது நாட்டின் மத எழுச்சியில் ஒரு பாரிய புத்துணர்ச்சியூட்டும் சந்தர்ப்பமாக அமையும். போதைப்பொருள் உள்ளிட்ட சமூகப் பேரழிவுகளிலிருந்து இளைய தலைமுறையினரைக் காப்பாற்றி, அறநெறி சார்ந்த நாட்டை நோக்கிக் கொண்டுசெல்ல அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும்.” – என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் மாத்தறையில் வெசாக் வலயம்
“தக்ஷினா பிரபா” எனும் பெயரில் “அபித்தரேத கல்யாணே” எனும் தொனிப்பொருளின் கீழ், தேசிய வெசாக் வாரத்திற்கு இணைந்ததாக நேற்று முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை மாத்தறை நகரத்தை மையமாகக் கொண்டு அரச வெசாக் விழா நடைபெறுகின்றது.

இந்த வெசாக் வலயத்தினுள் புனித தந்ததாது கண்காட்சி, தர்ம போதனைகள், அன்னதான நிகழ்வுகள், பிரம்மாண்டமான தோரணங்கள் மற்றும் பக்திப் பாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விசேட அம்சமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வானில் தோன்றும் பௌத்த சின்னங்களைக் காட்சிப்படுத்தும் நவீன தொழில்நுட்பக் காட்சியும், எல்.ஈ.டி. திரைகள் மற்றும் பொம்மலாட்டக் கலை மூலம் ஜாதக கதைகளை டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தும் வடிவங்களும் அமையவுள்ளன.

தேசிய வெசாக் விழாவையொட்டி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

அத்துடன், 2570 ஆவது அரச வெசாக் விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு நினைவு முத்திரையின் முதல் தபால்தலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், தென் மாகாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில வழிபாட்டுத் தலங்களுக்கான புனித பூமி காணிப் பத்திரங்களும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய முகுனுவெல அனுருத்த தேரர் வரவேற்புரையாற்றினார்.

மகாநாயக்க தேரர்கள், தாய்லாந்து மற்றும் வியட்நாம் பௌத்த நாடுகளின் தூதுக்குழுவினர், ஏனைய மதத் தலைவர்கள், அமைச்சர்களான கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, சுனில் ஹந்துன்னெத்தி, சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, தென் மாகாண ஆளுநர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் முப்படைகளின் பிரதானிகள் உட்படப் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Posts

பெண் ஒருவரைக் காணவில்லை.!

பெண் ஒருவரைக் காணவில்லை.!

by Mathavi
June 8, 2026
0

மட்டக்களப்பு எருவிலை சேர்ந்த கீர்த்தனா எனும் 24 வயதான ஒரு பெண்ணை காணவில்லை. எனவே, குறித்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 0740869024, 0701921595 எனும்...

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் ஆட்சியாளர்கள் ஒளிந்து கொள்ள இடமிருக்காது!

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் ஆட்சியாளர்கள் ஒளிந்து கொள்ள இடமிருக்காது!

by selvan
June 8, 2026
0

"வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த இடத்தைக் கண்டறிந்து துல்லியமான தகவல்களை வழங்கிய இராணுவ வீரரான சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்புக்கும்...

சொல்லிசைப்  பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

சொல்லிசைப்  பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

by selvan
June 8, 2026
0

சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் வல்வெட்டிதுறையில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் வல்வெட்டித்துறை நகரில் இடம்பெற்றது பிரதேச இளைஞர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட...

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

by selvan
June 8, 2026
0

கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு மூடப்பட்டுக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டம்; சாதாரண இளைஞர்களுக்கு ஒரு சட்டமா?

சலே விவகாரம்; நாமல் காட்டம்.!

by Mathavi
June 8, 2026
0

"உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். பொறுப்புக்கூறல் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், அரசியல் பழிவாங்கல்களை நோக்கமாகக் கொண்ட விசாரணைகள், உயிர்த்த...

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

by selvan
June 8, 2026
0

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டும் என ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர்...

ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!

ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!

by selvan
June 8, 2026
0

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி அக் கல்லூரி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை (8) காலை...

மத்திய மலைநாட்டில் கனமழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு!

மத்திய மலைநாட்டில் கனமழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு!

by selvan
June 8, 2026
0

மத்திய மலைநாட்டில் மேற்குச் சரிவுகளில் பல வாரங்களாகப் பெய்து வரும் கனமழையால், தேசிய நீர்மின் சக்தி அமைப்பிற்குச் சொந்தமான மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம்...

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

by selvan
June 8, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர், சக மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையின் மூலம்...

ஜூன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

ஜூன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

by selvan
June 8, 2026
0

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் முன்னெடுகவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி