உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் விளையாடுவது சந்தேகம்!

93 பார்வைகள்


இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேக்கப் பெத்தேல்,  ஜூன் மாதம் 4 ஆம் திகதி நியூசிலாந்துக்கு எதிராக ஆரம்பமாகவிருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் வெளியாகியுள்ளது.

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாடி வரும் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டின் போது காயமடைந்தது.

இதன் விளைவாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான பெங்களூரு அணியின் இறுதி குழு நிலைப் போட்டியில் இருந்து அவர் விலக்கப்பட்டார்.

இந்த நிலையில் பெத்தேல் தாயகம் திரும்புவது தொடர்பாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினருடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், லோர்ட்ஸில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான தேர்வில் அவர் பங்கேற்பாரா என்பதைத் தீர்மானிக்க, இங்கிலாந்தின் மருத்துவக் குழுவால் அவர் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரியில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இங்கிலாந்தின் அண்மைய டெஸ்ட் இன்னிங்ஸில் தனது முதல் சதத்தை அடித்த பெத்தேல் நடப்பு ஐ.பி.எல். சீசனில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஏழு இன்னிங்ஸ்களில் 96 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது எதிர்வரும் ஜூன் 04 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது போட்டி ஜூன் 17 அன்று கென்னிங்டன் ஓவல் மைதானத்திலும், மூன்றாவது போட்டி ஜூன் 25 அன்று நாட்டிங்ஹாம் மைதானத்திலும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

74 0 0