உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நுவரெலியாவில் அரச சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
21 பார்வைகள்

நுவரெலியா மாவட்ட நலிவுற்ற சமூகத்தை மேன்மைப்படுத்தும் அமைப்பினரால் கடந்த 19ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் அருகாமையில் இருந்து பொது மக்களுக்கு அஸ்வெசும, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், மற்றும் EPF, ETF போன்ற அரசினால் வழங்கக்கூடிய சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு செய்வதற்கான பாத யாத்திரை மற்றும் வீதி நாடகம் நடைபெற்றது.

இந்நிகழ்வு நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் அருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா பிரதான வீதி ஊடாக வருகை தந்து தபால் நிலையத்தின் முன்னால் சுற்றுவட்டத்தின் ஊடாக தபால் நிலையத்தில் முன் இவ்வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.

இதன்போது மக்களுக்கு அரசினால் வழங்கக்கூடிய சேவைகளை எவ்வாறு கிராம சேவகர்கள் ஊடாக பெற்றுக் கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு சம்பந்தமாக அரங்கேற்றப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள், நலன்விரும்பிகள் அஸ்வெசும கிடைக்கப்பெறாத பயனாளிகள் பங்கேற்று இருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

67 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0