பால்மாவின் விலை அதிகரிப்பு.!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 400 கிராம் பால்மா பைக்கட்டின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பைக்கட்டின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் உள்ள எந்தவொரு இறக்குமதி செய்யப்பட்ட பால்மா பைக்கட்டின் விலை அதிகரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும்போது விலை உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.