உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

உள்நாட்டுப் பொறிமுறை என்ற பெயரில் உலக நாடுகளை ஏமாற்றி விட்டது இலங்கை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

“இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கு உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நீதி வழங்குவதாகக் கூறி, தற்போதைய அரசு உள்ளடங்கலாக அடுத்தடுத்து ஆட்சிப்பீடமேறிய நாடாளுமன்ற அரசுகள் உலக நாடுகளை ஏமாற்றி, தமது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டன.” – என்று சர்வதேச மன்னிப்புச் சபை கடுமையாகச் சாடியுள்ளது.

ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, சர்வதேச மன்னிப்புச் சபையின் உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விசேட பதிவிலேயே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“போரில் உயிர் பிழைத்தவர்களும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடி, உயிரிழந்த எமது உறவுகளை நினைவுகூருவதுடன், தாம் அனுபவித்த வரலாற்றுத் துயரங்களுக்குத் தாமாகவே சாட்சியாக எழுந்து நிற்கின்றனர்.

மோதலின்போது நிகழ்த்தப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் இழப்பீடு என்பன உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உலகுக்கு மீண்டும் நினைவூட்டுகின்றது.

பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துவதாக இலங்கை அரசு சர்வதேச ரீதியாகப் பலமுறை வாக்குறுதியளித்த போதிலும், அவை அனைத்தும் வெற்று வார்த்தைகளாகவே போயின.

இலங்கையில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ‘தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு’ , நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகளை முற்றிலும் சீர்குலைத்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின்படி, நீண்டகாலமாகத் தொடரும் எமது இனப் பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் கடந்தகால மீறல்களுக்கான சர்வதேசப் பொறுப்புக்கூறல் என்பன முறையாக நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே, தற்போதைய அரசுடன் எந்தவொரு அர்த்தமுள்ள ஒத்துழைப்பையும் முன்னெடுக்க முடியும் என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0