உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ராகம “ரணவிரு செவன” நலன்புரி நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

ராகம “ரணவிரு செவன” நலன்புரி நிலையத்திற்குச் சென்ற ஜனாதிபதி தங்கி சிகிச்சை பெறும் பாதுகாப்புப் படையினரின் நலம் விசாரித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று முற்பகல் ராகமவில் அமைந்துள்ள “ரணவிரு செவன” நலன்புரி மையத்துக்கு விஜயம் செய்து, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்புப் படையினரின் நலம் விசாரித்தார்.

இங்கு பாதுகாப்புப் படையினர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, தாய்நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக அவர்கள் அனைவரும் செய்த அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து, “ரணவிரு செவன” நிலையத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுடனும் கலந்துரையாடிய ஜனாதிபதி, சிகிச்சை பெற்று வரும் படையினருக்கு மேலும் வழங்கக்கூடிய மருத்துவ மற்றும் ஏனைய வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்றிகோ, இராணுவ சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.ஜி.எல்.கே. வீரகோன், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத் கொஹொன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0