உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மல்வானை வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க பிரதமர் சம்மதம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
121 பார்வைகள்

பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததால் மல்வானை வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

பசில் ராஜபக்சவிற்கு சொந்தமானது எனக் கருதப்படும் மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழகத்திற்கு வழங்குமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வீட்டை கடந்த 14 ஆம் திகதி முற்றுகையிட்டனர்.

கடந்த 14 ஆம் திகதியிலிருந்து இன்று வரை மாணவர்கள் அங்கேயே தங்கியிருந்து சமைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன் பசிலின் வீட்டை பல்கலை மாணவர்கள் தியேட்டராக கூட மாற்றியிருந்தனர்.

பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு குறித்த வீட்டை ஒப்படைக்கும் வரை வீட்டை விட்டு வெளியேற மாட்டோம் எனத் தெரிவித்து மாணவர்கள் அங்கு தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் குறித்தை வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்று (18) பிரதமருடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மாணவர் ஒன்றிய இணைப்பாளர் சசிந்து பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
காணியை கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதால், இந்த நேரத்தில் அந்த வளாகத்தில் இருந்து வெளியேறி செல்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மல்வானை காணியை வரும் நாட்களில் கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார். நாங்கள் கோரிய விடயத்திற்கு அரசாங்கத் தரப்பிலிருந்து ஒரு பதில் கிடைத்துள்ளது.

அந்தப் பதிலைத் தொடர்ந்து, இந்த நேரத்தில் மல்வானை காணியில் இருந்து வெளியேற நாங்கள் தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

149 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

139 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0