உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சுகாதார சீர்கேட்டுடன் உள்ள கினிகத்தேன அரச பேருந்து நிலையம்!!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கினிகத்தேன நகரில் பயணிகள் நலன் கருதி அமைக்க பட்ட அரச பேருந்து நிலையம் பாரிய அளவில் சுகாதார சீர் கேட்டுடன் உள்ளது.

இந்த பேருந்து நிலையம் ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரத்துக்கு உட்பட்டது.அங்கு நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான பேருந்துகள் அங்கு தரித்து செல்வதை காண கூடியதாக உள்ளது. குறிப்பாக நாட்டின் பல பாகங்களுக்கும் இந்த பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

அத் தரிப்பிடத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணிகள் நாளாந்தம் தரித்து இருந்து செல்வார்கள்.அத்துடன் வர்த்தக நிலையங்கள் உள்ளன இரண்டாம் மாடியில் முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பறவைகளின் எச்சம் மற்றும் மனிதர்களின் வெற்றிலை எச்சில் முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பாரிய துர் நாற்றம் வீசுகிறது.

அங்கு நாளாந்தம் வந்து வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயணிகள் சாரதிகள் நடத்துனர்கள் பாதசாரிகள் பாரிய தாக்கத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அம்பகமு பிரதேச சபையின் தவிசாளர் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

2 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

68 0 0