உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

108 பார்வைகள்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து, உள்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட இடைக்காலக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி அன்று நியமித்தார்.

முன்னாள் முதலீட்டு வங்கியாளரும், எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான எரான் விக்ரமரத்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த இடைக்காலக் குழுவில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் ரொஷான் மகாநாம ஆகியோரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்குள் அவசியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதே இந்த இடைக்காலக் குழுவின் முதன்மை நோக்கமாகும்.

அரசாங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, நிலைமைகளை ஆராய்வதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) உயர்மட்ட அதிகாரி ஒருவர் அடங்கிய ஐசிசி-யின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பிடிஐ (PTI) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐசிசியின் பிரதித் தலைவர் இம்ரான் க்வாஜா (Imran Khwaja) நேற்று 15 ஆம் திகதி இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து, ஐசிசியின் முக்கிய அதிகாரியும், பிசிசிஐ-யின் (BCCI) உயர்மட்டப் பொறுப்பில் உள்ளவருமான மற்றொரு அதிகாரி இன்று 16 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளார்.

கிரிக்கெட் நிர்வாகங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதில் ஐசிசி கடுமையான விதிகளைக் கொண்டுள்ள பின்னணியில், இந்த உயர்மட்டக் குழுவின் இலங்கை விஜயம் மற்றும் அவர்களது அடுத்தகட்ட நகர்வுகள் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

91 0 0