உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

டிஜிட்டல் உலகில் மாணவர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயலமர்வு!!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நீர்கொழும்பு – கொச்சிக்கடை NG/தோப்பு தோமஸ் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில், “டிஜிட்டல் உலகின் பாதுகாப்பும் பொறுப்பும்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு 15 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (NISD) சமூகப் பணி இளமாணி (BSW) பட்டப்படிப்பு இரண்டாம் வருட மாணவர்களின் “Youth and Development” பாடநெறியின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடுகளிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த செயலமர்வில், பாடசாலையின் தரம் 11 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு விரிவுரையாளர் எப்.ஆர். ரமீஷாகான் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், எஸ்.தர்ஷிகா, பீ. கிருத்திகா, சீ.தர்ஷனி, எஸ். கஸ்தூரி, எம்.எம்.எப். சம்ஹா மற்றும் எம்.எச்.எப். சாதிகா ஆகிய இரண்டாம் வருட மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதான வளவாளராக சமூகப் பணி இளமாணி பட்டப்படிப்பின் மூன்றாம் வருட மாணவரும் ஊடகப் பயிற்றுவிப்பாளருமான ஏ. முஹம்மது இன்சாப் கலந்துகொண்டு, டிஜிட்டல் தளங்களைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கினார்.

குழுப் பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு அமர்வுகள் மூலம் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் பகிரப்பட்டதுடன், இந்நிகழ்வு பாடசாலை சமூகத்தினரிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0