உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரச சொத்துக்களை அழித்ததை மூடிமறைக்கவே திசைகாட்டி என்ற பெயரில் அதிகாரத்தை பிடித்துள்ளனர்.

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
77 பார்வைகள்

“தற்போதைய திசைகாட்டி அரசு எவ்வகையிலும் சட்டபூர்வமானதல்ல. இது நீதிமன்ற சுயாதீனத்தன்மையை அழிக்கும் ஒரு கொடுங்கோல் ஆட்சி” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க பகிரங்கமாக சாடியுள்ளார்.

பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்முறை, கொள்ளை மற்றும் அரச சொத்துக்களை அழித்த வரலாற்றை மூடிமறைக்கவே ‘திசைகாட்டி’ என்ற பெயரில் இவர்கள் அதிகாரத்தைப் பிடித்துள்ளனர். இவர்களது பொய் வாக்குறுதிகளைத் தொகுத்தால் பல புத்தகங்களையே எழுத முடியும் என்றார்.

ஜனாதிபதி அநுரகுமாரவின் மே தின உரையைச் சுட்டிக்காட்டிய துமிந்த திஸாநாயக்க, “வரும் 25ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வரவுள்ளது, கைதட்டத் தயாராக இருங்கள் என ஜனாதிபதி மேடையில் கூறுகின்றார். தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜனாதிபதிக்கு அது எப்படித் தெரியும்? ஒன்று அவர் நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் அல்லது நீதிபதி தீர்ப்பை முன்கூட்டியே ஜனாதிபதிக்கு கசியவிட்டிருக்க வேண்டும். இந்த இரண்டுமே நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு ஆபத்தானது” என்று விவரித்தார்.

“யுத்த காலத்தில் வடக்கில் இயங்கிய புலி நீதிமன்றத் தீர்ப்புகளில் கூட பிரபாகரன் தலையிட்டதாகத் தெரியவில்லை. ஆனால், இன்று அநுரகுமார பிரபாகரனையும் மிஞ்சிச் சென்று நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.” என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

‘டித்வா’ புயல் இழப்பீடு உள்ளிட்ட பல விடயங்களில் அரசு மக்களை ஏமாற்றியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், நாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்ள மக்கள் வெட்கப்படத் தேவையில்லை. ஆனால், அந்த வெட்கத்துக்காக நீங்கள் மௌனமாக இருந்தால் நாடு முழுமையாக அழிந்துவிடும். இப்போதாவது விழித்தெழுந்து இந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் போராடுங்கள் – என்றும் நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

148 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

139 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0