உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெள்ளத்தால் புத்தளத்தில் 27 ஆயிரம் பேர் பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
70 பார்வைகள்

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் மோசமான காலநிலை காரணமாக 7 ஆயிரத்து 206 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 222 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலாளர் இந்திக சில்வா தெரிவித்துள்ளார்.

புத்தளம், வனாத்தவில்லு மற்றும் ஆனமடுவ ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களே இவ்வாறு வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு பாதுகாப்பு மையங்களில் தற்போது 16 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

விசுத்தாராம விகாரையில் 47 பேரும், புத்தளம் தெற்கு இந்து கோயிலில் 5 பேரும் தங்கியுள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவுகளை வழங்கும் பணிகளை அனர்த்த நிவாரண சேவை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

புத்தளத்தின் முக்கிய அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

புத்தளம் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் பொலிஸ் நிலையம், பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் காலநிலை ஆய்வு அலுவலகம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் என்பவையே வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

புத்தளம் இந்துக் கல்லூரி, பாத்திமா மகளிர் கல்லூரி, சாஹிரா தேசிய கல்லூரி, சென்ட் அன்ரூஸ் மத்திய கல்லூரி மற்றும் ஆனந்தா கல்லூரி ஆகிய பாடசாலைகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளநீர் காரணமாகப் பிரதான போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புத்தளம் ரயில் பாதை, புத்தளம் – அனுராதபுரம் வீதி, புத்தளம் – குருணாகல் வீதி மற்றும் புத்தளம் – சிலாபம் வீதியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்தப் போக்குவரத்துப் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று புத்தளம் மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

138 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

137 0 0