உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் கவனத்துக்கு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன சந்தியை அண்மித்துள்ள அளுத்கம-மத்துகம சாலை, நீரில் மூழ்கியதன் காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (2026.05.13) அப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இலகுரக வாகனங்களுக்கான வெலிபென்ன சந்தியின் பல நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு விபரம்; கொழும்பு நுழைவாயில்: இலகுரக வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து வரும் வாகன வெளியேறும் வாயில்: இலகுரக வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளது. காலியிலிருந்து வரும் வாகன வெளியேறும் வாயில்: இலகுரக வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளது. காலி நுழைவாயில்: அனைத்து வாகனப் போக்குவரத்திற்கும் திறந்திருக்கும். சாலை நீரில் மூழ்கியுள்ளமையினால், ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், சாரதிகள் நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்பாகவும், முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

3 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

68 0 0