உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!

52 பார்வைகள்

அகமதாபாத்தில் செவ்வாயன்று 12 ஆம் திகதி நடந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமான சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் அவர்கள் இந்தியன் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தனர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, சாய் சுதர்சன் (44 பந்துகளில் 61 ஓட்டங்கள்) மற்றும் வொஷிங்டன் சுந்தர் (33 பந்துகளில் 50 ஓட்டங்கள்) ஆகியோரின் விடாமுயற்சியான அரைசதங்களின் உதவியுடன் 168/7 ஓட்டங்களை பதிவு செய்தது.

ஆரம்பத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டபோதிலும், இந்த ஜோடி ஆட்டத்தை நிலைநிறுத்தி, கடினமான ஆடுகளத்தில் ஒரு சவாலான மொத்த ஓட்டங்களை உறுதிசெய்தது.

இதில், வொஷிங்டன் சுந்தர் இறுதிக்கட்டத்தில் தனது சரளமான துடுப்பாட்டம் மூலம் வேகத்தை அதிகரிக்க, சுதர்சன் கட்டுப்படுத்தப்பட்ட ஆக்ரோஷத்துடன் நிலைத்து நின்றார்.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுக்கு பிரஃபுல் ஹிங்கே தலைமை தாங்கினார், அவர் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதே நேரத்தில், அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் 20 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தைக் கட்டுப்படுத்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய‍ே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, குஜராத்தின் சிறப்பான பந்துவீச்சுத் தாக்குதலால் 14.5 ஓவர்களில் 86 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

ககிசோ ரபாடா 28 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்து வீச்சுக்கு தலைமை தாங்கினார். தனது கூர்மையான புதிய பந்து வீச்சு மூலம் முன்னணி வரிசை துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஆரம்பத்திலேயே தடுமாற வைத்தார்.

அவருக்கு மொஹமட் சிராஜ் நல்ல ஆதரவளித்தார், அவர் உடனடியாக ஒரு விக்கெட்-மெய்டன் ஓவர் வீசித் தாக்கினார்.

தொடர்ந்து ஜேசன் ஹோல்டர், பவர்பிளேக்குப் பின்னர் தனது 3/20 பந்துவீச்சின் மூலம் ஹைதராபாத்தின் சேஸிங்கின் முதுகெலும்பை உடைத்தார். இவர்களின் பந்து வீச்சுத் தாக்குதல்களினால் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவாகச் சரிந்தனர்.

டிராவிஸ் ஹெட் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். நிதிஷ் குமார் ரெட்டியும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், படுமோசமான துடுப்பாட்டத்தின் ஒரு பகுதியாக ஹைதராபாத் அணி 60/7 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் அதிபடியாக 19 ஓட்டங்களை எடுத்தார். போட்டியின் ஆட்டநாயகனாக ககிசோ ரபாடா தெரிவானார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

74 0 0