உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பொலிஸ் பரிசோதகர் சுட்டுக் கொ*லை; உந்துருளி ஓட்டுநர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிதாரி பயணித்த உந்துருளியை ஓட்டிச் சென்ற நபர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘கரந்தெனிய சுத்தா’ என்ற குற்றவாளியின் சகோதரரும், தற்போது குறித்த பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருபவருமான ‘எஸ்.எஃப். ராஜு’விடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரந்தெனிய சுத்தாவினால் வழிநடத்தப்பட்ட கொலைகள் குறித்த தகவல்கள் அந்த பொலிஸ் அதிகாரிடம் இருந்த காரணத்தினாலேயே அவர் கொல்லப்பட்டதாக சந்தேகநபர் வெளிப்படுத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், தாக்குதலின் பின்னர் கரந்தெனிய சுத்தாவினால் துபாய் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான குறித்த துப்பாக்கிதாரி, துபாயில் போதைப்பொருள் கிடைக்காத காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகநபர்கள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல் உண்மையா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, ராஜுவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கரந்தெனிய சுத்தாவிற்குச் சொந்தமான ரி-56 ரக துப்பாக்கி ஒன்று, அதன் மெகசின் மற்றும் 15 தோட்டாக்கள் மீட்டியாகொட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டதன் மூலம், கரந்தெனிய சுத்தாவிற்குச் சொந்தமானவை எனக் கூறப்படும் 8 ரி-56 ரக துப்பாக்கிகளில் 6 துப்பாக்கிகள் இதுவரை பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் நேரடி மேற்பார்வையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்குவின் வழிகாட்டலில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரிவங்ச உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0