உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர்களுக்கு தடுப்புக்காவல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (09 ) இரவு அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த இரண்டு சந்தேக நபர்களும் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம்.பிரியங்கர தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை(10) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் கைதான இரு சந்தேக நபர்களையும் 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் நீண்ட காலமாக சூட்சுமமாக கடல் மற்றும் தரை வழியாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதான சந்தேக நபர்களில் கடற்குதிரை என பட்டப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றுமொரு சந்தேகநபரிடம் இருந்து 20 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 5 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டது.

குறித்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள், 80 ஆயிரம் ரூபாய் பணம், இலத்திரனியல் தராசு, நவீன கைத்தொலைபேசிகள் என்பன சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம்.பிரியங்கரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது 40 மற்றும் 31 வயது மதிக்கத்தக்க குறித்த இரு சந்தேநபர்களில் ஒருவர் தலைமுடி வெட்டும் தொழில் செய்பவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. இச்சந்தேக நபர்கள் புத்தளம், மன்னார் மாவட்டங்களில் இருந்து தரை மற்றும் கடல் வழியாக போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் புத்தளம் மாவட்டம் உடப்பு பகுதி மற்றும் கல்முனை பகுதியை குறித்த சந்தேக நபர்கள் நிரந்தர வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பதுடன் காரைதீவு பகுதியில் வாடகை அடிப்படையில் வீடு ஒன்றினை பெற்று இக்கடத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை மேலதிக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கைதான இரு சந்தேக நபர்களும் முரணான வாக்குமூலங்களை ஏற்கனவே பொலிஸாருக்கு வழங்கி விசாரணைகளை திசை திருப்ப முயன்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் கைதான சந்தேக நபர்கள் மற்றும் சான்றுப்பொருட்கள் யாவும் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம்.பிரியங்கர தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

67 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0