உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பாகிஸ்​தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை!

29 பார்வைகள்

வங்கதேசம் – பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்​பூர் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேச அணி 413 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.

இதையடுத்து விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 46 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்புக்கு 179 ரன்​கள் எடுத்​தது. அசான் அவைஸ் 85, அப்​துல்லா பாஸல் 37 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய பாகிஸ்தான் அணி 100.3 ஓவர்​களில் 386 ரன்​கள் குவித்து ஆட்டமிழந்​தது. சதம் அடித்த அசான் அவைஸ் 165 பந்​துகளில், 14 பவுண்​டரி​களு​டன் 103 ரன்​கள் எடுத்து வெளி​யேறி​னார். அப்​துல்லா பாஸல் 60, கேப்​டன் ஷான் மசூத் 9, சவுத் ஷகீல் 0, சல்​மான் ஆகா 58, முகமது ரிஸ்​வான் 59, நோமன் அலி 2, ஷாகின் ஷா அப்ரிடி 13, ஹசன் அலி 6 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்தனர்.

வங்​கதேச அணி தரப்​பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்களை வீழ்த்​தி​னார். தஸ்​கின் அகமது, தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 27 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய வங்​கதேச அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 1.5 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 7 ரன்​கள் எடுத்​தது.

மஹ்​முதுல் ஹசன் ராய் 2 ரன்களும், ஷத்​மான் இஸ்​லாம் ரன் ஏதும் எடுக்​காமலும் களத்​தில் இருந்​தனர். 34 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள வங்​கதேச அணி 4-வது நாள் ஆட்​டத்தை இன்​று தொடர்ந்​து விளை​யாடுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0