உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈழத்து சினிமாவில் ஒரு அரசியல் புரட்சி; ‘மிதிவெடி’ காணொளிப் பாடல் வெளியீடு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
102 பார்வைகள்

சமகால அரசியல் போக்குகளையும், இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வையும் மையமாக வைத்து ‘மிதிவெடி’ எனும் சொல்லிசை (Rap) காணொளிப் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. நவீன இசை வடிவமான சொல்லிசையைப் பயன்படுத்தி, பாமர மக்களும் எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில் இந்தப் பாடல் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈழத்துச் சினிமா மற்றும் அரசியல் களத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியை இந்தப் பாடல் பிரதிபலிக்கிறது. வெறும் பொழுதுபோக்காக மட்டுமன்றி, சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகக் கலை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு ‘மிதிவெடி’ ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

பின்னணித் தொழில்நுட்பக் கலைஞர்கள்
இப்பாடலின் வெற்றிக்கு பின்னால் பல திறமையான கலைஞர்களின் உழைப்பு அடங்கியுள்ளது.
வரிகள்: வி ஜெ நிதர்சன் (V J Nitharshan) தயாரிப்பு: லாவேந்தினி
இசை மற்றும் குரல்: கடலோன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: பகீரதன்

இளைஞர்களின் அரசியல் குரலை நவீன இசை வடிவில் (Modernized Rap) பதிவு செய்துள்ள விதம், ஈழத்துத் திரையுலகில் ஒரு புதிய பாய்ச்சலாகக் கருதப்படுகிறது. அரசியல் கருத்துக்களை நேரடியாகவும், அதேசமயம் கலைநயத்துடனும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இக்குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தக் காணொளிப் பாடல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் என்பதுடன் கலைத்துறையினர் மற்றும் அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

137 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

136 0 0