உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

புதிய தலைமுறையின் எதிர்பார்ப்பே இந்த வெற்றி.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ச.ஜோசப் விஜய்க்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழக மக்களின் பேராதரவையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்று, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும், இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பிலும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த வெற்றி வெறும் அரசியல் சாதனை மட்டுமல்ல. இது புதிய தலைமுறையின் எதிர்பார்ப்புகள், மக்களின் மாற்றத்துக்கான விருப்பம் மற்றும் ஜனநாயகத்தின் வலிமை ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.

தங்களின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நீதி, சமத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையுடன் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் என நம்புகின்றேன்.

தமிழகத்தின் முன்னாள் தலைவர்களுடன் எமது சமூக நலன் மற்றும் இருநாட்டு தமிழ் மக்களின் முன்னேற்றம் கருதி உருவாக்கப்பட்ட நட்புறவும் ஒத்துழைப்பும், தங்களின் தலைமையிலும் மேலும் வலுப்பெறும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது.

மக்கள் நலன், முன்னேற்றம் மற்றும் மனிதநேய ஆட்சி என்ற உயரிய இலக்குகளுடன் தங்களின் நிர்வாகம் தமிழ்நாட்டை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” – என்று ஜீவன் தொண்டமான் எம்.பி. தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் புதிய தலைமைக்கும் மலையகத் தலைமைக்கும் இடையிலான இந்த உறவுப் பாலம், இருநாட்டுத் தமிழ் மக்களின் நலன்களில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

63 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0