உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

36வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி: யாழ். மாவட்ட மட்டப் போட்டிகளில் கரவெட்டி மற்றும் கோப்பாய் அணிகள் வெற்றி!

76 பார்வைகள்

தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டிகள் அண்மையில் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த அணிகள் மோதிய இந்தப் போட்டியில், வீர வீராங்கனைகளின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன.

பெண்கள் பிரிவு முடிவுகள் பெண்கள் பிரிவிற்கான இறுதிப் போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கரவெட்டி பிரதேச இளைஞர் அணி முதலாம் இடத்தைப் பிடித்து சம்பியன் பட்டத்தை வென்றது. இவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாடிய பருத்தித்துறை பிரதேச இளைஞர் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

ஆண்கள் பிரிவு முடிவுகள் ஆண்கள் பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் கோப்பாய் பிரதேச இளைஞர் அணி முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி வாகை சூடியது. இப்போட்டியில் பலப்பரீட்சை நடத்திய பருத்தித்துறை பிரதேச இளைஞர் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

வெற்றி பெற்ற அணிகள் அடுத்ததாக நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

74 0 0