உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஷிரந்தி ராஜபக்ஷவின் 40 கோடி ரூபாய் வீடு வதந்தி; சி.ஐ.டியில் மொட்டுக் கட்சியினர் முறைப்பாடு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
65 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்குச் சொந்தமான 40 கோடி ரூபாய் பெறுமதியான வீடு எனச் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி நேற்று இந்த முறைப்பாட்டைச் செய்தார்.

முறைப்பாட்டின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பசன் கஸ்தூரி,
“தற்போதைய அரசின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் உள்ள ஆளுந்தரப்பின் 159 உறுப்பினர்களினதும் பல நரம்புகள் அதிரத் தொடங்கியுள்ளன. அதன் வெளிப்பாடே இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள்.” என்று குறிப்பிட்டார்.

“ராஜபக்ஷ குடும்பத்தினருக்குச் சொந்தமாக ஒரு சிறிய விளையாட்டு வீடு இருப்பதாகத் தெரிந்தால் கூட இந்த அரசு சும்மா இருக்கப்போவதில்லை என்பதை நாடு அறியும். அவ்வாறான நிலையில், ஆதாரமற்ற இவ்வாறான செய்திகளை அரசு திட்டமிட்டுப் பரப்புகின்றது.” என்றும் அவர் சாடினார்.

நீதி அமைச்சரின் அண்மைக்காலச் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், “நீதி அமைச்சர் தனது ஆதரவாளர்களுக்கு முன்னால் நின்றுகொண்டு வாய்ப்பாடு வாசிப்பதைப் போல், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்துப் பேசி வருகின்றார். இவ்வாறு அரசியல் மேடைகளில் வழக்குகளைப் பகிரங்கப்படுத்துவதன் ஊடாக, விசாரணைகளின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது” என்றும் தெரிவித்தார்.

அரசியல் இலாபத்துக்காக விசாரணைகளை அமைச்சர் திசைதிருப்புகின்றார் என்றும், இவ்வாறான நிலையில் அரசு முன்னெடுக்கும் விசாரணைகளை மக்கள் எவ்வாறு நம்புவார்கள் என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

153 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

145 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

135 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

134 0 0