உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

டெல்லியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

21 பார்வைகள்

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. டெல்லி கெபிடெல்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று 5 ஆம் திகதி 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாணயசுழற்சியில் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்கம் முதல் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

டெல்லி அணிக்கு ஆரம்ப வீரர்களான பதும் நிசங்கா மற்றும் கே.எல். ராகுல் நிதானமாக ஆடி முறையே 19 மற்றும் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். டெல்லி அணியில் நிலைத்து விளையாடிய சமீர் ரிஸ்வி 40 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது.

சென்னை தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்நீத் சிங் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 156 ஓட்டங்களை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உர்வில் பட்டெல் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

எனினும், சஞ்சு சாம்சன் மற்றும் கார்திக் ஷர்மா ஜோடி சிறப்பாக ஆடினர். சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 87 ஓட்டங்களையும், கார்த்திக் ஷர்மா 31 பந்துகளில் 41 ஓட்டங்களை குவித்தார். இதன் காரணமாக சி.எஸ்.கே. அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டகளை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0