உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரியில்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரி மாதத்தில் செயல்படுத்தப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். சீர்திருத்தங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இன்று 05 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.

முன்னர் அச்சிடப்பட்ட பாடத்திட்டங்களில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு, தனது ஆய்வை முடித்து, திருத்தங்களைப் பரிந்துரைத்து, கலந்துரையாடல்களை இறுதி செய்துள்ளது. திருத்தப்பட்ட பாடத் தொகுப்புகள் இந்த மாதம் அச்சிடுவதற்கு அனுப்பப்படும்.

புதிய சீர்திருத்தங்களின் கீழ் ஆசிரியர் பயிற்சி ஜூன் மாதத்தில் தொடங்கும், அதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தங்கள் குறித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான விளக்கக் கூட்டங்கள் ஜூலை மாதம் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பாத் தசநாயக்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

33 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0