திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி.!
மஸ்கெலியா நகரில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
மஸ்கெலியா நகரில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஹட்டன் டிக்கோயா இடையே பிரதான சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீப்பரவல் காரணமாக முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இந்த தீ விபத்தால் பயணிகள் எவருக்கும் பாதிப்பு இல்லை என ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

