உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 04.05.2026

ராசி பலன்கள் 5 மாதங்கள் முன்
63 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். உங்களுடைய மனதில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்த நல்லது அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். இறைவனுக்கு மறக்காமல் நன்றி சொல்லுங்கள். இயலாத இரண்டு பேருக்கு உதவி செய்யுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் பல மடங்கு பெருக்கும் நாள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேமிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை மறவாதீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். தேவைகள் சரியான நேரத்தில் பூர்த்தியாகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் பிரச்சினைகள் தொல்லைகள், அவதியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இருக்காது. இந்த நாள் கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். கவனமாக செயல்படுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுக போக வாழ்வு இருக்கும். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். எவ்வளவு பெரிய சிக்கலான விஷயங்கள் என்றாலும் ஒரு நொடிப் பொழுதில் அதை சரி செய்து விடுவீர்கள். அத்தனை திறமையும் இன்று வெளிப்படும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். கவனக்குறைவாக நீங்கள் கையில் எடுக்கும் வேலைகள் எதிர்காலத்தில் உங்களுக்கு பிரச்சினையை கொடுக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதம் செய்ய வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனச்சலனும் சஞ்சலம் இருக்கும். செய்த தவறை எண்ணி மனம் வருத்தப்படும். செய்த தவறுக்கு உண்டான மன்னிப்பும் கிடைக்கும். மனம் வருந்தி, உங்கள் ஈகோவை விட்டுக் கொடுத்து நீங்கள் கீழே இறங்கி வருவீர்கள். பல நாள் பிரச்சினைகள் சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வம் அதிகரிக்கும். சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் முடிக்க முடியாத வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வீண் விரைய செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். மனது இலேசாகும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். நீண்ட தூர பயணங்களால் நல்லது நடக்கும். செலவுகள் அதிகரிக்கும் நாள் இன்று.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். எந்த ஒரு பொருளையும் இன்று அடமானம் வைக்க வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் இன்று.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். துணிச்சலாக செயல்படுவீர்கள். முகத்துக்கு நேரே வெளிப்படையாக பேசுவீர்கள். உங்களுக்கான கம்பீரம் வெளிப்படும். இன்று தைரியசாலியாக வலம் வரப் போகிறீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். நீண்ட நாள் மனதில் பதுக்கி வைத்திருந்த அத்தனை ஆதங்கமும் வெளிப்பட்டுவிடும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு உயரக்கூடிய நாள். உங்களுக்கான அந்தஸ்து உயரும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். எதிர்கால தேவைக்கு சேமிப்பும் அதிகரிக்கும். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு மறக்காமல் நன்றி சொல்லுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலையில் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாகவே நகர்ந்து செல்லும். சுப செலவுகள் ஏற்படும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டில் பிள்ளைகளுடைய நலன் மனைவியினுடைய நலனில் அக்கறை காட்டி மன திருப்தியை அடைவீர்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0