உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

ராசி பலன்கள் 5 மாதங்கள் முன்
45 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது கொஞ்சம் கவனம் இருக்கட்டும். புது மனிதர்களை நம்ப வேண்டாம். தெரியாத வேலையில் காலை வைக்க வேண்டாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். காரியத்தடை விலகும். முயற்சிகள் உடனடியாக வெற்றி அடையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூடும் நாள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். பயணங்களால் ஏற்பட்ட அசதி விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு பதிவு உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெளியூர் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுப செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். இந்த விடுமுறை நாள் உங்களுக்கு மறக்க முடியாத நல்ல அனுபவத்தை கொடுக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். தேவையில்லாத டென்ஷன் வரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்காது. உடல் சோர்வு ஏற்படும். பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். வெளியிடங்களில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இந்த நாள் கொஞ்சம் மந்தமான நாள். கவனமாக செயல்படுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தனம் தானியம் செழிப்பான நாளாக இருக்கப் போகிறது. எதிர்பாராத பொன், பொருள் சேர்க்கை இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் பெற காத்துக் கொண்டிருக்கிறது. எதிர்பாராத பரிசுகளையும் பெறுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். சுப காரிய தடைகள் விலகும். மனதிற்கு பிடித்த மன வாழ்க்கை அமையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை கொஞ்சம் அதிகரிக்கும். அனாவசிய பேச்சுக்களை, அனாவசிய யோசனையை தவிர்த்து விட்டு, அன்றாட வேளையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். தேவையில்லாத நண்பர்களிடம் இருந்து விலகி இருக்கவும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று கவனத்துடன் செயல்பட வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் அலட்சியம் இருக்கக்கூடாது. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷார். கையில் இருக்கும் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆக மொத்தத்தில் இந்த நாள் சின்ன சின்ன இழப்புகளால் கஷ்டம் வரும், பார்த்துக் கொள்ளுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இன்று புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையை மட்டும் செய்தால் போதும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை நண்பர்களோடு வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். இறைவழிபாடு செய்வதில் ஆர்வம் அதிகம் காட்டுவீர்கள். பொது பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வேலையும் வியாபாரமும் சுமூகமாக நடக்கும். நிதி நிலைமை சீராகும். டென்ஷன் குறையும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். விடுமுறை நாள் என்பதால் இந்த நாள் இனிய நாளாக அமையும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். உறவுகளோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று, இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0