மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புது அனுபவங்களும் கிடைக்கும். வாழ்க்கையில் நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து, அந்த தவறுகளை திருத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற சரியான பாதையை இறைவன் உங்களுக்கு காட்டி கொடுப்பார். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். சுப செலவுகள் ஏற்படும். வீண் விரைய செலவுகள் குறையும். மனதில் இருந்த தேவையில்லாத குழப்பங்கள் விலகி, நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கர்வம் நிறைந்த, பெருமையான நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். தலை குனிந்த இடத்தில் உங்களுக்கான அவப்பெயர் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் வெற்றி கிடைக்கும். நான் ஜெயித்து விட்டேன், என்ற கர்வம் கொள்வதில் எந்த தவறும் இல்லை. இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் நல்லபடியாக நடந்து முடியும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். பேசும் வார்த்தையில் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். நீண்ட தூர பயணங்களால் நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். கமிஷன் தொழில் நல்ல இலாபத்தை கொடுக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். உடல் அசதி விலகும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையப் போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கு தடையாக இருந்து வந்த நபர்கள், உங்களை விட்டு தானாக விலகுவார்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதி இருக்கும். தேவையான அளவு கையில் பணம் இருக்கும். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். குறித்த நேரத்தில், குறித்த வேலையை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். சுப செலவுகள் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுப காரிய தடைகள் விலகும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். சிலருக்கு வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உண்டாகும். கடமையில் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று யோகக்காரர்களாக வலம் வரப்போகிறீர்கள். நீங்கள் நினைத்துப் பார்க்காத நல்லது கூட உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டப் போகிறது. எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. சொத்து சுகம் வாங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த நல்ல நாளை நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சாந்தமான நிதானமான நாளாக இருக்கும். அமைதி வெளிப்படும். முன்கோபம் வராது. நிறைய நல்ல விஷயங்களை இன்று ரொம்ப ரொம்ப சுலபமாக சாதித்து விடுவீர்கள். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பிரிந்த கணவன் மனைவி உறவு ஒன்று சேரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாள் வராத கடன் வசூல் ஆகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் உள்ளது. கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானம் தேவை. உங்களுடைய பேச்சுக்கு சபையில் மரியாதை இருக்காது. குறைவாக பேசுங்கள். தேவையில்லாத இடத்தில் பேசாமல் இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது. நிதி நிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். ஆடம்பர செலவு, தேவையில்லாத செலவை குறைத்துக் கொள்வது நல்லது.


