மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தாமதத்தால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளுக்கு செல்லும்போது அரை மணி நேரம் முன்கூட்டியே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்லவும். பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. குறிப்பாக இளைஞர்கள் இன்று உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவசர முடிவுகள் எடுக்கக் கூடாது. யாரிடமும் சண்டை வாக்குவாதம் செய்யக்கூடாது. இன்று எதிர்ப்புகள் போராட்டங்கள் நிறைந்த நாளாக இருக்கும். இந்த நாளை கடந்து செல்ல இறைவனின் அருள் தேவை. இறை வழிபாடு செய்துவிட்டு இந்த நாளை தொடங்குங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். புது வாய்ப்புகள் வீடு தேடி வரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் செய்ய முடியாத வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். காரிய தடை விலகும் நாள் இன்று. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். தேவையான செலவுகளாகவே இருந்தாலும், வரவுக்கு மீறி செலவு செய்யக்கூடிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. புதிய முதலீடுகளில் கவனம் தேவை. மற்றபடி இந்த நாள் இனிய நாளாக அமையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். புது சேமிப்புகள் தொடங்கலாம். நீண்ட தூர பயணங்கள் இனிமையாக அமையும். பிள்ளைகளால் ஏற்பட்டு வந்த மனக்கசப்பு நீங்கும். உறவுகளுக்குள் இருந்து வந்த மன கசப்புகள் விலகும். நல்லதே நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வராத கடன், வசூல் ஆகும். சொத்து சேர்க்கை உண்டு. அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வியாபாரத்திலும் வேலையிலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து, ஒரு முடிவை எடுக்க வேண்டும். வேலையை தக்கவைத்துக் கொள்வது நல்லது. மூன்றாவது நபரின் பேச்சை கண்மூடித்தனமாக கேட்க வேண்டாம். நிதானமாக இருந்தால் இன்று நிறைய நல்ல விஷயங்களை சாதிக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நீண்ட நாள் மன கஷ்டம் நீங்கும். பெரிய அளவில் போராட்டமாக இருந்த பிரச்சினைகள் கூட, சுலபமாக சரியாகும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். பயணங்களின் போது கவனம் இருக்கட்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும். வராத கடன் வசூல் ஆகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சேமிப்பு இரட்டிப்பாக வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகளை செய்யலாம். நீண்ட தூர பயணங்களால் நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். பலநாள் பிரச்சினைகள் சரியாகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். தடைபட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள். வேலையும் வியாபாரமும் சுமூகமான செல்லும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து உயரும் நாள். வாய்ப்புகள் வீடு தேடி வரும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்தால் நல்லதே நடக்கும்.



