உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கை விஜயம்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
68 பார்வைகள்

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோவும் ஒரு தூதுக்குழுவும் மூன்று நாள் உத்தியோகப்பூர்வப் பயணமாக மே 3 ஆம் திகதி அன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது, ​​சுகாதாரத் துறையில் ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து, ரஷ்ய தூதுக்குழுவினர் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜெயதிஸ்ஸாவுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இந்தக் குழு, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜய ஹேரத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

மே 4 ஆம் திகதி அன்று, ரஷ்ய சுகாதார அமைச்சரும் அவரது தூதுக்குழுவினரும் கொழும்பு தேசிய மருத்துவமனையையும், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தையும் பார்வையிடுவார்கள்.

இரு நாடுகளும் தங்களது சுகாதார அமைச்சகங்களுக்கு இடையே ஒப்பந்தங்களை எட்டுவதற்கும் உத்தேசித்துள்ளன.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், சிறப்பு மருத்துவப் பயிற்சி மற்றும் மேம்பட்ட பயிற்சி, பரிமாற்றங்கள் மற்றும் கூட்டுப் பாடநெறிகள் போன்ற கல்விசார் ஒத்துழைப்பு, ஆயுர்வேதம் மற்றும் சுகாதாரச் சுற்றுலா உள்ளிட்ட சுகாதாரத் துறையின் பல்வேறு பகுதிகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் இந்தப் பயணம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய சுகாதார அமைச்சரும் அவரது தூதுக்குழுவினரும், இலங்கையின் சுகாதார சேவையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்தை முடித்த பின்னர் முராஷ்கோவும் அவரது தூதுக்குழுவினரும் மே 5 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

148 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

137 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

131 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

130 0 0