உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

68 பார்வைகள்

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு 28 ஆம் திகதி நடைபெற்ற 40 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தோல்வியானது நடப்பு ஐபிஎல் சீசனில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பெற்றுக் கொண்ட முதல் தோல்வியாகும்.

நேற்றிரவு 07.30 மணிக்கு நியூ சண்டரிகாரில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுசெய்ய அழைக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்களை எடுத்தது. பிரப்சிம்ரன் சிங் 44 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 59 ஓட்டங்களை பதிவு செய்தார்.

அதேநேரத்தில், மார்கஸ் ஸ்டோனிஸ் 22 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை எடுத்து அணியின் கடைசி நேர எழுச்சிக்கு வழிவகுத்தார். ராஜஸ்தான் அணிக்காக, யஷ் ராஜ் புஞ்சா இரண்டு விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நாந்த்ரே பர்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர், 223 ஓட்டங்களை துரத்திய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டோனோவன் ஃபெரேரா ஆகியோர் தங்களது சிறப்பான அரைசதங்களால் அணியை முன்னின்று வழிநடத்த, சுபம் துபே 12 பந்துகளில் அதிரடியாக 31 ஓட்டங்களை குவித்து அணிக்கு ஒரு எளிதான வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக டோனோவன் ஃபெரைரா தெரிவானார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

91 0 0