உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பிக்குகளைச் சீரழிக்க அரசியல் சக்திகள் சதியாம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

“நாட்டில் பௌத்த பிக்குகளின் ஒழுக்கத்தைச் சீரழிப்பதற்கும், அவர்களைப் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் சிக்க வைப்பதற்கும் சில அரசியல் சக்திகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றன” என்று பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்தார்.

நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

பல்கலைக்கழகச் சூழலில் பிக்குகள் மாற்றமடைவது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
“பிரிவெனா கல்வியில் சிறந்த ஒழுக்கத்தைப் பயிலும் பிக்குகள், பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்த பின்னரே மாற்றமடைகின்றனர். அங்குள்ள மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் அமைப்புகள், பிக்குகளுக்கு மார்க்சியச் சிந்தனைகளைத் தவறான முறையில் போதித்து அவர்களை அநாகரிகமான நிலைக்குத் தள்ளுகின்றன.

குஷ் உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கங்களுக்குப் பிக்குகள் அங்குள்ள அரசியல் பின்புலத்தாலேயே பழக்கப்படுத்தப்படுகின்றனர். இது பௌத்த சாசனத்தைச் சர்வதேச ரீதியில் அவமதிப்பதற்காகக் கையாளப்படும் ஓர் உபாயம்.

தாய்லாந்திலிருந்து குஷ் கடத்திய விவகாரத்தில் பிக்குகள் கைது செய்யப்பட்டமை குறித்து சந்தேகம் நிலவுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான பிக்குகளா அல்லது கடத்தலுக்காகச் சீருடை அணிவிக்கப்பட்டவர்களா என்பது விசாரிக்கப்பட வேண்டும். அரசும் இடதுசாரி கட்சிகளும் தங்களுக்குப் பிடிக்காத பிக்குகளைப் பழிவாங்க இவ்வாறான விவகாரங்களைப் பின்னணியிலிருந்து இயக்குகின்றனவா என்ற பலத்த சந்தேகம் எமக்குள்ளது.

இந்த அரசு பௌத்த எதிர்ப்பு அரசு ஆகும். கத்தோலிக்க மதகுருமாருக்கு ஒரு நீதி, பிக்குகளுக்கு ஒரு நீதி என இந்த அரசு செயற்படுகின்றது.

பிக்குகள் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர்களைத் தூண்டிய அரசியல் சக்திகள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும்.

தேசத்தின் ஆன்மீக அடையாளமான பிக்குகளைச் சீரழிக்கும் இத்தகைய அரசியல் கலாச்சாரம் மிகவும் ஆபத்தானது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

33 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

54 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

58 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

20 0 0