உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா!

34 பார்வைகள்

அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தலைவர் ஷம்மி சில்வா புதன்கிழமை ஏப்ரல் 29 ஆம் திகதி தனது பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எனினும், அவருடன் சேர்ந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்குழுவும் பதவி விலகுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து ஷம்மி சில்வா இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாத்தியமான வெளியேறும் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார் என உள்வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த சந்திப்பு சுமூகமாக இருந்ததாகவும் அறியப்படுகிறது.

எவ்வாறெனினும் ஷம்மி சில்வா பதவி விலகும் பட்சத்தில், புதிய தேர்தல்கள் நடத்தப்படும் வரை, அதிகாரிகள் ஒரு இடைக்காலக் குழுவை நியமிக்கலாம் அல்லது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை ஒரு தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின் கீழ் ஒப்படைக்கலாம்.

இதற்கிடையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரன் விக்ரமரத்ன ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்மி சில்வா, அன்று முதல் பல தேர்தல்களில் வெற்றி பெற்று அப்பதவியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

37 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

17 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

16 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

35 0 0