உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மீண்டும் அதிகாரத்தைக் கோருவதற்கு நாமலுக்கு என்ன தார்மீக உரிமை உண்டு?

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
18 பார்வைகள்

“நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி மக்களை ஏழ்மையாக்கிய ராஜபக்ஷக்களுக்கு, மீண்டும் அதிகாரத்தைக் கோருவதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

கொலன்னாவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“கடந்த கால ஊழல்வாதிகளைச் சிறைக்கு அனுப்புவார்கள் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேறவில்லை.

கடந்த ஒன்றரை வருட கால ஆட்சியில் பல ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளன. எனினும், அவற்றுக்கு அமைச்சரவை பொறுப்பேற்காமல், அரச அதிகாரிகளே பலியாக்கப்படுகின்றனர்.

மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீது முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.” – என்றார்.

பொருளாதார மீட்சி பற்றி நாமல் ராஜபக்ஷ பேசுவது வேடிக்கையானது என்று சுட்டிக்காட்டிய ஹேஷா விதானகே, “கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் நாடு வங்குரோத்து அடைந்தபோது, அந்த அமைச்சரவையில் அனைத்து ராஜபக்ஷர்களும் அங்கம் வகித்தார்கள். அவர்கள் மீதான வெறுப்பால்தான் மக்கள் அநுரகுமாரவைத் தெரிவு செய்தார்கள்” என்றார்.

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பலர் இப்போதே தயாராகி வருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், இந்த நாட்டை வழிநடத்துவதற்கான தகுதியும் முதிர்ச்சியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு மாத்திரமே உண்டு என்றும் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0