உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் மாணவன் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

சுமார் 92 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகள், இலத்திரனியல் சிகரெட்டுகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி என்பவற்றை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த 19 வயதுடைய மாணவன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு-14 பகுதியைச் சேர்ந்த இந்த மாணவன், கடந்த 24ஆம் திகதி டுபாய்க்குச் சென்று, இன்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 02.00 மணிக்கு எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EM-648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலைய வருகை முனையத்தில் வர்த்தகர்களுக்காக ஒதுக்கப்பட்ட கிரீன் சேனல் ஊடாக இந்த பொருட்களை வெளியே கொண்டு செல்ல முயன்ற போதே, அங்கிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபர் கொண்டு வந்த 03 பயணப் பொதிகளுக்குள் வெளிநாட்டு உற்பத்தியான மென்செஸ்டர் மற்றும் பிளாட்டினம் வகையைச் சேர்ந்த 278 கார்ட்டூன்கள், 70 அலகு இலத்திரனியல் சிகரெட்டுகள் மற்றும் 55 அங்குல அகலத் திரை கொண்ட ஒரு தொலைக்காட்சிப் பெட்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 9,222,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0