• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 11, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தந்தை செல்வாவின் 49ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு.!

Mathavi by Mathavi
April 26, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
தந்தை செல்வாவின் 49ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு.!
Share on FacebookShare on Twitter

நீதியாக இருக்க வேண்டும், நியாயமாக இருக்க வேண்டும், சமத்துவமாக இருக்க வேண்டும். அதே இடத்தில் சட்டப்படியான ஆட்சி இருக்க வேண்டும். ஊழல் மோசடிகள் இல்லாமல் ஆட்சி செய்தால் அந்த அரசாங்கங்கள் தொடர்வதைப் பற்றி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. கடந்த காலத்தில் பாரிய ஊழல் மோசடிகள், உயிர்க்கொலைகள், கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற மோசமான செயல்கள் நடைபெற்றன. இப்படிப்பட்டவர்கள் எப்படி வந்து ஆட்சி அமைப்பார்கள் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மூன்று ஜனாதிபதிகள் அந்த உண்மைகளை மறைத்துச் சென்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதைய நிலையில் அந்த உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அவர்களுடன் கூட இருந்தவர்கள் சாட்சியங்களாக மாறி உண்மைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இப்போது நடைபெறுகின்ற விசாரணை திருப்தியளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 49ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்றைய தினம் தந்தை செல்வாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாகவும் தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு இரத்ததானம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் க.சோபனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் வடகிழக்கு மாகாண தலைவர் கி.சேயோன், மாநகரசபையின் பிரதி முதல்வர் தினேஸ் உட்பட பிரதேசசபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், வாலிப முன்னணி உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் வடகிழக்கு மாகாண தலைவர் சேயோன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோபனனால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனையவர்களினால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம் ஒன்றும் நடாத்தப்பட்டது. இந்த இரத்ததான நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு இரத்தக்கொடை வழங்கியதையும் காணமுடிந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக கடந்த காலங்களில் உண்மைகளை மூடி மறைக்கின்ற ஒரு செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதாவது அந்த பலியானவர்கள் தான் முக்கியமான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டிருந்தது.

மூன்று ஜனாதிபதிகள் அந்த உண்மைகளை மறைத்துச் சென்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதைய நிலையில் அந்த உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்களுடன் கூட இருந்தவர்கள் சாட்சியங்களாக மாறி உண்மைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இப்போது நடைபெறுகின்ற விசாரணை திருப்தியளிக்கின்றது. உண்மையான குற்றவாளிகள் பிடிபடக்கூடிய நிலைமை இருக்கின்றது. யாரும் அப்பாவிகளாக இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அப்பாவிகள் வேடத்தில் கொடும்பாவிகளாக இருந்து இந்த குற்றச்செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

உயிர்களைப் பலியெடுக்கலாம் உண்மைகளைப் புதைக்க முடியாது. புத்தகங்களை எழுதி உண்மைகளை மறைக்கின்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இப்போது அந்த விடயங்கள் எல்லாவற்றையும் எல்லாவற்றையும் கடந்து உண்மைகள் வெளிக்கொணரக்கூடிய ஒரு நிலை காணப்படுகின்றது. எனவே பாதிக்கப்பட்ட 278 மக்கள், கொல்லப்பட்ட 278 மக்கள் இருக்கின்றார்கள், அப்பாவிகள், பக்தர்கள். அதேபோன்று 500-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களுடைய உயிரைப் பெற முடியாது நீதி கிடைக்க வேண்டும். இதற்குச் சூத்திரதாரியாக இருந்தவர் பெரியவர் சிறியவர் என்ற பேதமில்லாமல் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

இப்போது மேஜர் ஜெனரல் தரத்தில் உள்ளவரும் கைது செய்யப்பட்டு உள்ளுக்குள் இருக்கின்றார். அவரும் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படுகிறார். அவரோடு இன்னொரு அரசியல்வாதியும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. எவராக இருந்தாலும் இந்த அப்பாவிகளைக் கொலை செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். அந்தத் தண்டனை நீதியின் மூலமாக சட்டத்தின் மூலமாக நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.”

உண்மையில் தற்போதைய நிலையில் ஆளுங்கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. எதிர்க்கட்சிகள் மிகவும் நலிவான அல்லது பலவீனமான நிலையில் இருக்கின்றார்கள். அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய நிலைமை இப்போதைக்கு எங்களுக்குத் தெரியவில்லை.

வழக்கமாக எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை வீழ்த்தி ஆட்சிப்பீடம் ஏற வேண்டும் என்று அவர்கள் நினைப்பதுண்டு. அந்த அடிப்படையில் அவர் சிந்திக்கின்றார்கள். ஆனால் தற்போதான நிலையில் அதற்குரிய வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் நீதியாக நியாயமாக அரசாங்கம் இயங்குமாக இருந்தால், ஊழல் மோசடி இல்லாமல் இயங்குமாக இருந்தால் அந்த அரசாங்கங்கள் தொடர்ந்து செல்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

நீதியாக இருக்க வேண்டும், நியாயமாக இருக்க வேண்டும், சமத்துவமாக இருக்க வேண்டும். அதே இடத்தில் சட்டப்படியான ஆட்சி இருக்க வேண்டும். ஊழல் மோசடிகள் இல்லாமல் ஆட்சி செய்தால் அந்த அரசாங்கங்கள் தொடர்வதைப் பற்றி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. கடந்த காலத்தில் பாரிய ஊழல் மோசடிகள், உயிர்க்கொலைகள், கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற மோசமான செயல்கள் நடைபெற்றன. இப்படிப்பட்டவர்கள் எப்படி வந்து ஆட்சி அமைப்பார்கள் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கின்றது. ஆகவே மக்கள் அதனைப் பார்த்துக்கொள்வார்கள்.

Related Posts

பௌத்த பீடாதிபதிகளுக்கு அஞ்சி சட்டத்தை மீறுகின்றதா பொலிஸ்?

பௌத்த பீடாதிபதிகளுக்கு அஞ்சி சட்டத்தை மீறுகின்றதா பொலிஸ்?

by Bharathy
May 11, 2026
0

"பொலிஸார் பௌத்த பீடாதிபதிகளுக்கு அஞ்சி, சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களைத் தடுத்து சட்ட மீறல்களுக்குத் துணை போகின்றனர்" என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். தையிட்டி விகாரை...

தையிட்டி வீதி விவகாரம்; மே 21 ஆம் திகதி தீர்ப்பு.!

தையிட்டி வீதி விவகாரம்; மே 21 ஆம் திகதி தீர்ப்பு.!

by Mathavi
May 11, 2026
0

யாழ். தையிட்டியில் சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்கப்படும்...

நான்கு மாதங்களின் பின் ‘யாழ் தேவி’ வருகை.!

நான்கு மாதங்களின் பின் ‘யாழ் தேவி’ வருகை.!

by Mathavi
May 11, 2026
0

காலநிலை அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு, கோட்டை - காங்கேசன்துறை இடையிலான 'யாழ் தேவி' ரயில் சேவை, நான்கு மாத இடைவேளைக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை முதல்...

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து.!

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து.!

by Mathavi
May 11, 2026
0

இரத்தினபுரி - பெல்மதுல்ல வீதியின் வெலிஹந்த பிரதேசத்தில் உள்ள இரட்டை வளைவுப் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பாரிய வாகனம்...

யாழ். மலசலகூட விவகாரம் குறித்து இருதரப்பும் இணைந்து பேசி தீர்வைக் காண முன்வரவேண்டும்.!

யாழ். மலசலகூட விவகாரம் குறித்து இருதரப்பும் இணைந்து பேசி தீர்வைக் காண முன்வரவேண்டும்.!

by Mathavi
May 11, 2026
0

மக்களின் அவசிய தேவை கருதி யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத் தொகுதியை நிர்வகிப்பது தொடர்பில் யாழ் மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே...

உந்துருளியில் தலைக்கவசம் இன்றி பயணம்; சிக்கிய பெண்கள்.!

உந்துருளியில் தலைக்கவசம் இன்றி பயணம்; சிக்கிய பெண்கள்.!

by Mathavi
May 11, 2026
0

உந்துருளி ஒன்றில் தலைக்கவசம் இன்றி, ஆபத்தான முறையில் மூன்று யுவதிகள் பயணிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, நான்கு பெண்களை புத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர். வீதியில்...

மன்னாரில் அமைக்கப்படும் கடலோரப் பூங்காவை பார்வையிட்ட வடமாகாண சுற்றுலா அதிகார சபை தலைவர்.!

மன்னாரில் அமைக்கப்படும் கடலோரப் பூங்காவை பார்வையிட்ட வடமாகாண சுற்றுலா அதிகார சபை தலைவர்.!

by Mathavi
May 11, 2026
0

மன்னார் நகரசபையின் மேற்பார்வையில், மன்னார் நுழைவாயில் பாலத்திற்கு அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடலோரப் பூங்காவின் (Coastal Park) முதற்கட்டப் பணிகளை வடமாகாண சுற்றுலா அதிகார சபையின்...

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து.!

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு.!

by Mathavi
May 11, 2026
0

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - கொழும்பு வீதியின்...

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு.!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு.!

by Mathavi
May 11, 2026
0

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. டித்வா புயலின் போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட...

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது.!

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது.!

by Mathavi
May 11, 2026
0

நாட்டின் இருவேறு பகுதிகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு - தலுபொத்த பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி