உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
64 பார்வைகள்

கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சிப்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இருந்து வந்த லொறி ஒன்றை மறித்து சோதனை செய்தபோது, அதில் அனுமதிப்பத்திரமின்றி எடுத்துச் செல்லப்பட்ட சிப்பிகள் இருப்பது கண்டறியப்பட்டதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தெரியவருவதாவது, கிண்ணியா நடுத்தீவு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட சிப்பிகள் மொத்தம் 620 மூட்டைகளாக இருந்தன.

இந்த சிப்பிகள் கிண்ணியாவிலிருந்து குளியாப்பிட்டிய பகுதிக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக லொறி சாரதி வாக்குமூலம் அளித்துள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், சந்தேகநபர்களை இன்றைய தினம் கந்தளாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

146 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

135 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

129 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

129 0 0