உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 24.04.2026

ராசி பலன்கள் 6 மாதங்கள் முன்
72 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள்‌. தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். நிதிநிலைமை சீராகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். இந்த நாள் கொஞ்சம் சோகமாக நகரும். இருந்தாலும் உங்களுடைய கடமையிலிருந்து, நீங்கள் பின்வாங்க மாட்டீர்கள். நேரத்திற்கு உங்களுடைய வேலையை முடித்து விடுவீர்கள். இன்று புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். இறை வழிபாடு செய்வது நன்மையை தரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். நிதிநிலைமை சீராகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். சில பேருக்கு பயணத்தின் மூலம் அலைச்சல் வர வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வேலையில் கவனம் தேவை. நேரத்தை வீணடிக்க கூடாது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். அலைச்சலால் உண்டான ஆரோக்கிய பிரச்சினைகள் சரியாகும். மன நிம்மதி கிடைக்கும். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லதே நடக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்றும் நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது மனிதர்களின் அனுபவம், புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். பல நாள் முயற்சிக்கு நல்லதொரு வெற்றியை கடவுள் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். கண் திருஷ்டி விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். வேலையும் வியாபாரமும் சுமூகமாக நடக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். நிதிநிலைமை சீராக இருக்கும். பயணங்கள் இனிதே நிறைவடையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பேச்சாற்றல் நிறைந்த நாளாக இருக்கும். பலரால் செய்து முடிக்க முடியாத காரியத்தை, உங்களுடைய பேச்சுத் திறமையால் செய்து முடிப்பீர்கள். வசீகர தோற்றம் வெளிப்படும். நல்லது நடக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காரியத்தடை விலகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை நீங்கும். பயணங்களின் போது கவனம் இருக்கட்டும். வண்டி வாகனம் ஓட்டும்போது அலட்சியம் வேண்டாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும் நாளாக இருக்கும். உங்களுக்கான ஆதரவு நிச்சயம் கிடைக்கும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். உற்றார் உறவினர்களோடு இருந்து வந்த மனக்கசப்பு விலகி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வீட்டில் சுப காரிய தடைகள் விலகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான முன்னுரிமை கிடைக்கும். கடன் சுமை குறையும். வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மன நிறைவு உண்டாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளோடு நல்ல உடன்பாடு ஏற்படும். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வுக்கான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும். முன்னேற்றம் நிறைந்த இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0