உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

96 பார்வைகள்

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 32 ஆவது போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணி தனது சிறப்பான பந்துவீச்சால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டி நேற்றிரவு (22) லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.இரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது பந்து வீச்சினை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸ் போக்கினை லக்னோ அணியின் முன்னணி பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி தனது சிறப்பான வேகப்பந்து வீச்சு மூலம் மாற்றியமைத்தார்.அவரது பந்து வீச்சில்‍ யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை ஆரம்பத்திலேயே நிலைகுலையச் செய்தன.

அவருடன் இணைந்து, மொஹ்சின் கான், இளம் வயது நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஷிம்ரான் ஹெட்மயரை ஆட்டமிழக்கச் செய்தார்.சிறப்பாகப் பந்துவீசிய பிரின்ஸ் யாதவ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்திற்கு மேலும் வலு சேர்த்தார்.

இதனால், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 159/6 என்ற சராசரிக்கும் குறைவான ஓட்டத்துடன் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த மூவரும் இணைந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் டாட் பந்துகளை வீசி, ராஜஸ்தான் அணியின் ஓட்ட விகிதத்தைக் கட்டுப்படுத்தினர்.ரவீந்திர ஜடேஜா மாத்திரம் அதிகபடியாக 29 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்தார்.எனினும், ஒழுங்கற்ற முறையில் இலக்கை விரட்டியதால் அவர்களின் முயற்சிகள் வீணாயின.

மிட்செல் மார்ஷ் விடாமுயற்சியுடன் 55 ஓட்டங்கள் எடுத்தபோதிலும், மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன.சுமாரான 160 ஓட்டங்களை துரத்திய லக்னோ அணியால் ஒருபோதும் வேகத்தைப் பெற முடியவில்லை. மேலும் 18 ஓவர்களில் வெறும் 119 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், நாந்த்ரே பர்கர் மற்றும் பிரிஜேஷ் சர்மா ஆகியோர் அதிகபடியாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.போட்டியின் ஆட்டநாயகனாக ஜடேஜா தெரிவானார்.இந்த வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

91 0 0