உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சீமானுக்கு ஆதரவாக யாழில் மாட்டு வண்டி ஊர்வலம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்து நாளையதினம் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு ஆதரவாக பதாகைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்றையதினம் ஏப்ரல் 22 ஆம் திகதி மானிப்பாயில் மாட்டு வண்டி ஊர்வலம் ஒன்றும் இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் இணைந்து இதனை முன்னெடுத்தனர்.


இதன்போது நாம் தமிழர் கட்சி சின்னம் மற்றும் செந்தமிழன் சீமானின் உருவப்படம் அடங்கிய ஆடையை அணிந்து, சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகையை மாட்டு வண்டிலில் கட்டி, ஏரினை சுமந்தவாறு மாட்டுவண்டி ஊர்வலம் இடம்பெற்றது.

மானிப்பாய் பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பித்த இந்த ஊர்வலமானது மருதடி விநாயகர் ஆலயம்வரை சென்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0