உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 19.04.2026

ராசி பலன்கள் 6 மாதங்கள் முன்
45 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையிலும், வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படவீர்கள். வரக்கூடிய சின்னச் சின்ன பிரச்சினைகளை கூட சுலபமாக எதிர்கொள்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். சோம்பேறித்தனம் விலகும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். சிந்தனை இருக்கும். தேவையற்ற குழப்பங்கள் வரும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. முருகர் வழிபாடு செய்தால் வரக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. வேலையில் கவனம் தேவை. தெரியாத மனிதர்களை நம்ப வேண்டாம். புதிய முதலீட்டில் கவனம் தேவை. செலவுகளை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று நட்பு ரீதியாக நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பயணங்கள் இனிமையாக அமையும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். பிள்ளைகளுடைய நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன தடைகள் தடங்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. உங்களுடைய வேலையில் கவனமாக செயல்பட வேண்டும். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கவனமாக செயல்படுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். புதிய முதலீடுகள் பெரிய அளவில் இலாபத்தை கொடுக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையில் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சினைகள் சரியாகும். காரியத்தடை விலகும் நாள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பு தேவை. தாமதமாக எந்த வேலையையும் தொடங்க கூடாது. எந்த முக்கியமான வேலையாக இருந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அந்த இடத்திற்கு சென்று விடுங்கள். குழந்தைகளுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையான அளவு ஓய்வு எடுக்கவும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிமையான நாளாக அமையும். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்யக்கூடிய வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டில் பழுதான பொருட்களை சரி செய்வீர்கள். மனநிலை சீராகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். கடன் தொல்லை நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். வேலையின் நல்ல முன்னேற்றம் இருக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு வாய்ப்பு உள்ளது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். புது மனிதர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிரிகளால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுபகாரிய நிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகளும் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைச் சுமை கொஞ்சம் அதிகமாகும். ஆரோக்கியத்தின் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் எதிர்ப்புகள் இருக்கும். அனுசரணையாக பேச வேண்டும். முன் கோபம் கூடாது. உயர் அதிகாரிகளின் ஆதரவை பெற வேண்டும். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. வண்டி வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை. நிதி நிலைமை சீராக இருக்கும். கடன் சுமை விலகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0