உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

செட்டிகுளத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு சத்தியலிங்கம் எம்.பி 1.5 மில்லியன் ஒதுக்கீடு..!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
77 பார்வைகள்

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுமார் 07 சமூக அபிவிருத்தி மற்றும் கல்விசார் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2026ம் ஆண்டிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெரியதம்பனை கிராம அபிவிருத்திச்சங்க கட்டிட திருத்தம், நீலியாமோட்டை சரஸ்வதி வித்தியாலய ஸ்மாட் வகுப்பறை திருத்தம், கங்கன்குளம் சண்முகபுரம் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கான தளபாடங்கள் வழங்கல், 2ம் பண்ணை நாவலர் முன்பள்ளி காணிக்கான நெற் வேலி அமைத்தல், முதலியார்குளம் புனித அந்தோனியார் முன்பள்ளியில் சிறுவர் பூங்கா அமைத்தல், கப்பாச்சி பிள்ளையார் ஆலய புனரமைப்பு, கங்கன்குளம் ஶ்ரீ சுப்ரமணியம் சனசமூக நிலையத்திற்கான தளபாடங்கள் வழங்கல் ஆகிய வேலைத்திட்டங்களிற்கே குறித்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செட்டிகுளம் பிரதேசசபை உபதவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசா, பிரதேசசபை உறுப்பினர்களான அலைக்சாந்தர் அலைக்ஸ்யூட், யோகேஸ்வரன் சனோஜன், பாராளுமன்ற உறுப்பினரின் செட்டிகுளம் பிரிவு இணைப்பாளர் சண்முகநாதன் பத்மசீலன் ஆகியோரின் கோரிக்கையின் பிரகாரம் குறித்த பகுதியை சேர்ந்த அமைப்புக்களின் அபிவிருத்தியை கருத்தில்கொண்டு குறித்த நிதியொதுக்கீட்டினை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

இவற்றிற்கான அனுமதி கடிதங்கள் அண்மையில் செட்டிகுளம் கட்சி அலுவலகத்தில் வைத்து உரிய அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசபை உபதவிசாளர் தே.சிவானந்தராசா, பிரதேசசபை உறுப்பினர் அ.அலைக்ஸ்யூட், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாலர் பாலச்சந்திரன் சிந்துஜன், செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் ச.பத்மசீலன் உள்ளிட்டோர் குறித்த அனுமதி கடிதத்தினை அமைப்பினரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0