உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 18.04.2026

ராசி பலன்கள் 6 மாதங்கள் முன்
68 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய பண கஷ்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வராத கடன் வசூலாகும். சொத்து சுகம் சேர்க்கை உண்டு. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். மன நிம்மதி கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. தாமதத்தால் சில பல பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான மீட்டிங் அப்பாயின்மென்ட், ஏதாவது இருந்தால் முன்கூட்டியே உங்களுடைய வேலைகளை முடித்து விடுங்கள். உயர் அதிகாரிகளோடு பகைத்துக் கொள்ள வேண்டாம். அனுசரணையாக நடந்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வீண் விரைய செலவுகளை கட்டுப்படுத்த, நீங்கள் தான் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற பொருட்களை பணம் கொடுத்து வாங்காதீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்துடன் செயல்படவும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுடைய பேச்சுத்திறமை வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சொந்த பந்தங்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள். மன நிம்மதி கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். மூன்று வேலை நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று, இந்த நாள் இனிய நாளாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. பண தேவை பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் திறமையாக செயல்படுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வெளியூர் பயணங்கள் நல்லபடியாக நடக்கும். இன்று, மாலை நேரத்திற்கு பிறகு உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல செய்தி உண்டு. நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நல்லபடியாக நடந்து முடியும். ஏமாற்றத்திலிருந்து விடுபட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைவிலகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாள். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். பயணங்களால் நல்லது நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதி இருக்கும். எதிரி தொல்லை விலகும். பல நாள் குழப்பத்திற்கு விடிவு காலம் பிறக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி, சுமூகமான போக்கு நிலவும். சுப செலவுகள் ஏற்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். பேச்சுத்திறமை வெளிப்படும். எதிரி தொல்லை விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். தேவைக்கு ஏற்ப வருமானம் இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். மனதிற்கு பிடித்த கோவிலுக்கு செல்வதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் கைக்கூடி வரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான நாள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூடுமானவரை பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். குடும்ப உறவுகளை பிரிந்து இருக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0