உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தோட்டப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

தலவாக்கலை தோட்டப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 1/2 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளது.

திருவிழாக் காலத்தை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவாக்கலை, ஹோலிரூட் தோட்ட பகுதியில் திருவிழாக் காலத்தில் மதுபானசாலைகள் மூடப்பட்டிருப்பதை சாதகமாகப் பயன்படுத்தி, மூடியிருந்த தோட்ட வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே இவை கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட மதுபானங்களின் பெறுமதி சுமார் 450,000 ரூபாய் (நான்கரை இலட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபான போத்தல்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

53 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

39 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

32 0 0