உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கடும் மழை, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை (16) பிற்பகல் முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இன்று நண்பகல் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை இரவு 11 வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிற்பகல் 1 மணிக்குப் பின்னர், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்கள் உட்பட பல இடங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழையுடன் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் போது ஏற்படக்கூடிய மின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

54 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

48 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

33 0 0