இன்றைய ராசி பலன்கள் – 16.04.2026
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாந்தமான பொறுமையான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் சிந்தனையில் பொறுமை வெளிப்படும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். நீண்ட நாள் பகை விலகும். லட்சுமி கடாட்சம் பெருகும் நாள். இன்று நீண்ட தூர பயணங்களின் போது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமையாக இருப்பீர்கள். தேவையில்லாத சண்டை சச்சரவுக்கு செல்ல மாட்டீர்கள். எதிரிகளிடமிருந்து விலகி நிற்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். நீண்ட நாள் வராத கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீர்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வெயில் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் வேலை சுமையை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு ஓய்வு எடுக்கவும். தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.
கடகம்
கடக ராசிக்4காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல ஓய்வு கிடைக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக முடித்து விடுவீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். மனதில் இருந்த பாரம் குறையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் எந்த ஒரு வேலையையும் இன்று தொடங்க வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். முன்கோபம் வேண்டாம். தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். வார்த்தையில் நிதானம் இருக்கட்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது நபர்களின் அறிமுகம், புது அனுபவங்களை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் பகை விலகும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்குழப்பம் இருக்கும். புது முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம் வரும். சொந்தபந்தங்களோடு வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை தேவை. படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் நிதானமாக இருங்கள். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் நாளை தள்ளி வையுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுக்கலாம். புதுசாக வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடையலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். நீங்கள் எடுக்கும் புது முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த நஷ்டங்கள், இலாபகரமாக மாறும். சேமிப்பை உயர்த்தலாம். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் உங்களுடைய கவனம் இருக்கும். மன நிம்மதி கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். வெளியிடங்களில் சாப்பிடாதீர்கள். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுவது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் வெளிப்படும். அவசர அவசரமாக பேசி பிரச்சினைகளை நீங்களே உண்டாக்கி கொள்வீர்கள். நல்ல நட்பு, நல்ல உறவுகளை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வார்த்தையில் கட்டாயம் நிதானம் தேவை. புதிய முதலீடுகள் வேண்டாம். புது முயற்சிகள் வேண்டாம். இன்று தியானம் செய்துவிட்டு, உங்களுடைய நாளை தொடங்குவது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஆன்மீகத்தில் உங்களுடைய மனது ஈடுபடும். நிதி நிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் நிறைய நல்ல விஷயங்களை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் புது அறிமுகங்கள், புதுவரவை கொடுக்கும்.