உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பெண் உட்பட இருவர் கொ*லை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் நேற்று (14) மாலை பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 32 வயதுடைய வெல்லவாய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவராவார்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பயாகல பகுதியில் நபர் ஒருவர் தலையில் தடி ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

பயாகல, விகாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று சித்திரை புத்தாண்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபான விருந்தின் போது, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இக்கொலை நடந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

0 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0