உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 14.04.2026

ராசி பலன்கள் 6 மாதங்கள் முன்
52 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இனிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். இந்த தமிழ் புத்தாண்டுக்கு பிறகு உங்களுடைய வாழ்க்கையில் நல்லதொரு மாற்றம் உண்டாகும். இறை வழிபாடு செய்யுங்கள். முடிந்தால் இன்று முருகர் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நல்லதே நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிகாரர்களை பொறுத்தவரை இன்று பொறுமையாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். புது எதிரிகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். எதிரிகளை நண்பர்களாக மாற்றிக் கொள்ளுங்கள். பேச்சில் நிதானம் இருக்கட்டும். முருகர் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுக போக வாழ்வு கிடைக்கும். மன நிம்மதி இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். துர்க்கை அம்மன் வழிபாடு மேற்கொள்ளுங்கள். பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டு உங்களுக்கு இனிய புத்தாண்டாக அமையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனநிறைவு இருக்கும். நிம்மதி இருக்கும். இறைவழிபாட்டால் மனதில் இருந்த சஞ்சலங்கள் விலகும். உறவுகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு மேலோங்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாப நோக்கத்தோடு சிந்திப்பீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ரொம்பவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வீர்கள். இதனால் நண்பர்களுக்குள், உறவினர்களுக்குள் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும். மற்றபடி இந்த நாள் நல்ல நாளாக தான் இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இரக்க குணம் வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்னச் சின்ன சங்கடங்கள் வரும். பெரிதாக பாதிப்புகள் இருக்காது. பிரச்சினைகளை எதிர் கொள்ளும் மன தைரியம் உங்களிடத்தில் வெளிப்படும். இறை வழிபாடு செய்யுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த நல்லது உங்கள் வாழ்வில் நடக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வண்டி வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சின்னச் சின்ன சஞ்சலங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேவையற்ற சிந்தனையை விலக்கி வையுங்கள். உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். முன் கோபம் வேண்டாம். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு இருக்கும். வீண் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இருக்கும். மனதிற்குள் இருந்து வந்த பல கேள்விகளுக்கு சரியான விடை கிடைக்கும். எதிரி தொல்லை நீங்கும். வருமானம் பெருகும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு நடந்து கொள்வீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். புதுசாக வேலைவாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நீண்ட தூர பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். ஆனால் தோல்வி இல்லை. இறைவழிபாடு செய்யுங்கள். நல்லதே நடக்கும். செலவுகளை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0