உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இரு யுவதிகளை துஷ் – பிரயோகம் செய்ய முயற்சி; சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
139 பார்வைகள்

கடந்த இரு நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை வவுனிக்குளம் குள பகுதியில் மல்லாவி திருச்சபை ஊழியர் ஏற்பாடு செய்துள்ளார்.

தனது பொறுப்பில் உள்ள சிறுவர் அபிவிருத்தித் திட்ட ஊழியர்கள் (சுமார் 15 பேரை) ஒன்றிணைத்து குறித்த கொண்டாட்டம் வவுனிக்குள குளக்கட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கொண்டாட்டம் முடித்து ஏனைய ஊழியர்கள் தமது சொந்த வாகனங்களில் வீடு திரும்பியுள்ளனர்.

20 மற்றும் 21 வயதுடைய இரண்டு யுவதிகள் வாகனம் இல்லாமையால் குறித்த ஊழியர் தனது வாகனத்தில் ஏற்றி குளக்கட்டின் முடிவு வரை குறித்த வாகனம் பயணித்துள்ளது.

பயணத்தில் மயக்கமுற்ற யுவதிகளை குறித்த ஊழியர் மற்றும் பயணித்த இரண்டு திட்ட ஊழியர்கள் இணைந்து கூட்டு பாலியல் முயற்சி செய்ததாக மல்லாவி பொலிஸில் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமக்கு வைன் வழங்கப்பட்டதாகவும், அதனால் மயக்கம் ஏற்பட்டாகவும் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய பாதிக்கப்பட்ட யுவதிகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதிகளின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக மல்லாவி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தை செலுத்திய சாரதியும், மத போதகரும், மற்றுமொருவரும் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இது தொடர்பில் மத போதகர் உட்பட மூவரிடம் விசாரணைகளை முன்னெடுப்பதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் வாசஸ்தலத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போது மூவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

131 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

125 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

129 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

132 0 0