உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!

75 பார்வைகள்

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி (RCB) அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனில் தனது தோல்வியுறாத பயணத்தைத் தொடர்ந்து 4 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியில் 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பங்கு மிக முக்கியமானது.

தொடக்க வீரராகக் களம் இறங்கிய அவர், ஆர்சிபியின் வெறும் 26 பந்துகளில் 78 ஓட்டங்களை விளாசிய அவர், தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை பதிவுசெய்தார்.

போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்சிபி அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், வைபவ் குறித்துப் புகழ்ந்து பேசியுள்ளார்.

“அவர் விளையாடும் விதம் ஆச்சரியமாக இருக்கிறது எனவும் அவர் முறையான கிரிக்கெட் ஷாட்களை ஆடுகிறார் எனவும் 15 வயது சிறுவனுக்குரிய முதிர்ச்சியைத் தாண்டி, அவர் மிகவும் முதிர்ச்சியுடன் (Mature) விளையாடுகிறார் எனவும் அவரது சிறப்பான ஆட்டத்திற்கு நாம் உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0